இருளில் மூழ்கி கிடக்கும் பரமக்குடி அரசு மருத்துவமனை நுழைவாயில் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் புலம்பித் தள்ளும் பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வதும் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதும் வழக்கம் .
இந்த நிலையில் உள்நோயாளிகளின் உறவினர்கள் உணவு பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும்போது மின் விளக்குகள் இல்லாததால் விஷஜந்துக்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனையே அப்பாதையை கடந்து செல்வதாக புலம்பித் தள்ளும் நோயாளிகளின் உறவினர்கள்.
பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் மின்விளக்கு அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்