BREAKING NEWS

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரில் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரில் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின்

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியின் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் சென்னையைச் சேர்ந்த நேச்சுரல் பியூட்டி அகாடமியில் பணிபுரியும் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின், அதிநவீன சிகை அலங்கார நிபுணர் சுகந்தி ஆகியோர் பங்கு பெற்ற பயிலரங்கம் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தில் நவீன மணப்பெண் அலங்காரம், அதிநவீன சிகை அலங்காரம் ஆகிய பயிற்சிகளில் புதிய நுட்பங்களைச் செயல்முறையாக செய்து காட்டினர்.

இதில் இக்கல்லூரியில் பிஎஸ்சி பியூட்டி அண்ட் வெல்னஸ் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளும் டிப்ளமோ இன் பியூட்டி மற்றும் வெல்நெஸ் இல் படிக்கும் மாணவிகளும் கோவை மாவட்டத்தில் உள்ள அழகுத்துறை நிபுணர்களும் கலந்து கொண்டனர். மேலும் நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியின் வணிகத் தலைவர் குஞ்சன்கௌர், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. மீனா ஆகியோர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்
அழகுத்துறை இன்று மிக வேகமாக அதிநவீனத்துடன் வளர்ந்து வருகின்றது
இந்த நிலையில் அழகுத்துறையில் தொழில் வல்லுனர்களாக பணிபுரிய மூன்று வருட பிஎஸ்ஜி பியூட்டி மற்றும் வெல்நெஸ் என்ற பட்டப் படிப்பு மிகவும் அவசியம் என்றனர். இந்தப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவியருக்கு பல்வேறு அழகுத்துறையைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பு உள்ளது. படிக்கும் போதே இத்துறையைச் சேர்ந்த பல மாணவியர் வருமானம் ஈட்டுகிறார்கள். சொந்தமாக தொழில் துவங்க இப்பட்டப்படிப்பு மிகவும் உதவுகிறது.
மேலும் எங்கள் கல்லுரி அழகுத் துறை சார்பில் 2 வாரம், 1 மாதம், 3 மாதம் ஆகிய கால திட்டங்களில், பல பயிற்சிகள் வழங்கபட்டது அதற்கான சான்றிதழ்களும் நடை பெற்று வருகின்றது என்றார்.

CATEGORIES
TAGS