பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !
தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை வழங்காமல், மக்களை கவரும் வகையில் பேசி பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு ஏமாற்றுகிறார் என கூறி கடலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பண்ருட்டியில் திமுகவினர் வாயால் வடை சுட்டார் என கூறி வாக்கு சேகரிப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில்
தேர்தல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் மூலம் வாக்கு சேகரிப்பில் தீவிர காட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு அறிவித்த திட்டங்களான எய்ம்ஸ் மருத்துவமனை,
,கறுப்பு பணம் மீட்பு,பெட்ரோல் -டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவைகளை நிறைவேற்றாதவாயாலே வடை சுடும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் எனக்கூறி
திமுகவினர் பண்ருட்டி நகரப் பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் பேருந்து நிலையம் உள்ள கடையில் வடை சுட்டு கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.