சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.

ஓமலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…
சேலம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் அதன் ஒரு பகுதியாக
ஓமலூர் பேருந்து நிலையம்,கடைவீதி, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இரு சக்கர வாகன வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.
முன்னதாக ஓமலூர் அண்ணா சிலை அருகே பாமக வேட்பாளர் அண்ணாதுரை பேசும்போது, சேலம் மாவட்டத்தில் அதிமுக திமுக இரு கட்சிகளும் மாறி மாறி கொள்ளை அடிப்பதாகவும், ஜனநாயகம் செத்துப் போய்விட்டதாக கூறிய அவர் கொள்ளையடித்து வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் சேலம் தொகுதியில் பாமகவிற்கு அமோக ஆதரவு உள்ளது எனவும் கூறிய அவர் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அங்கு கூடியிருந்த பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த பரப்புரையில் ஏராளமான பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.