பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து பனை தாஜ்நகர் பாப்பம்பாளையம் கொக்கராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வின் போது பெண்கள் அவருக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர் மேலும் இந்த வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.