BREAKING NEWS

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் ஆடி பாடியபடி ஊர்வலம் மற்றும் சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு:-

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் ஆடி பாடியபடி ஊர்வலம் மற்றும் சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு:-

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஜெயின் சங்கத்திலிருந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீர்த்தங்கரர் உற்சவ மூர்த்தியை முக்கிய வீதிகள் வழியாக ஆண்கள் பெண்கள் ஊர்வலமாக ஆடிப்பாடி எடுத்து வந்தனர். மகாதான வீதி கச்சேரி சாலை வழியாக ஜெயின் ஆலயமான சுமதி நாத் ஆலயத்தை ஊர்வலம் வந்து அடைந்தது.

அங்கு பால் தீர்த்தம் தெளித்து சுமதிநாத் சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் பங்கேற்று ஆடி பாடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு ஜெயின் சமூகத்தினர் நீர் மோர் வழங்கினர்.

CATEGORIES
TAGS