அரியலூர் பழமை வாய்ந்த மாரியம்மன் உள்ளிட்ட 11ஆலயங்களில் குடமுழுக்கு

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் முருகன் விநாயகர் கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன.
இவ்வாலயத்திற்கு 18ம் தேதி யாக சாலை அமைக்கபட்டு 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இன்று யாகசாலையில் இருந்து புனிநீர் கொண்டு சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு அனைத்து ஆலயங்களில் உள்ள கலசங்களில் புனிநீர் ஊற்ற பட்டது.
குடமுழுக்கில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலையிலிருந்து அன்னதானங்கள் தொடர்ந்து நடைபெற்றன.