அரியலூர் முறையாக மருத்துவம் வழங்க தவறிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு.
அரியலூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவர் மருத்துவமனையில் இல்லை அபஸ்கான்ட் எனக் கூறி அவருக்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மறுத்துவிட்டனர்.
வேண்டுமென்றே சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் ( முன்னாள்) டி எம் டி திருமாவளவன் தலைமையில் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளித்தனர்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக சிகிச்சையில் உள்ள பாரதிதாசனை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் வெற்றி, செம்மலை, குமார் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர