மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் ஆடி பாடியபடி ஜெயின் சமூகத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நேற்று பிற்பகல் மயிலாடுதுறை சுமதி நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து இரவு பக்தி சந்தியா எனப்படும் ஆன்மீக இன்னிசை கச்சேரி மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் பிரபல பக்தி சந்தியா பாடகர் ஆன ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம் நபேடா என்பவர் குழுவினருடன் இணைந்து இன்னிசை ஆலாபனைகளால் தீர்த்தங்கரர் புகழ் பாடினார். அவரது கச்சேரியில் பங்கேற்ற ஜெயின் சமூகத்தினர் அனைவரும் எழுந்து நின்று ஆடி வழிபாடு செய்தனர்.