தலைப்பு செய்திகள்
இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி: தொலைபேசியில் 35 நிமிடம் உரை.
இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி: தொலைபேசியில் 35 நிமிடம் உரை.
இந்தியர்கள் மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 35 நிமிடம் பேசினார்.
உக்ரைனில் நிலவிவரும் சூழல் தொடர்பாக செலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி சுமார் 35 நிமிடங்கள் பேசினார். இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார். சுமியின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைன் அதிபர் தொடர்ந்து உதவ பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் சில நகரங்களில் ரஷியா தற்காலிகமாக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை ரஷியா நிறுத்தி உள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 12-வது நாளாக எட்டியுள்ள நிலையில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.