மன்னார்குடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட இரமஸ்சுவாமி திருக்கோவில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மன்னார்குடி அருகே தேவன்குடி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கோதண்ட இராமஸ்சுவாமி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் 1942 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பிறகு கோவில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்தது ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சிதிலமடைந்த கோவிலை புதிப்பித்து 82 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது .
மூன்று தினங்களாக விக்னேஸ்வர பூஜை , லட்சுமி ஹோமம் , நவகிரக பூஜை உடன் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது. இன்று காலை மூன்றாம்கால யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூர்ணாஹீதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடத்தப்பட்டது.
பின்னர் கோவிலின் விமான கலசத்தில் தீட்சிதர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது பின்னர் மூலஸ்தான சன்னதியில் ஸ்ரீ சீதாதேவி , லெட்சுமனர் சமேதரராக காட்சியளித்த ஸ்ரீ கோதண்ட இரமஸ்சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தையும், அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கபட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .