BREAKING NEWS

காட்பாடி உழவர் சந்தை பகுதியில் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கும் கண்காணிப்பாளர்!

காட்பாடி உழவர் சந்தை பகுதியில் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கும் கண்காணிப்பாளர்!

காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் காட்பாடி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தை வேலூர் மாவட்டத்தில் அதிகமாக விற்பனை செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் அன்றாடம் காய்கனிகளை விற்பனை செய்து குடும்பம் நடத்துவோர்ர் நடைபாதைகளில் கடைகளை போட்டு விற்பனை செய்து தங்கள் வயிற்றை கழுவி வருகின்றனர்.

இப்படி ஏழை, எளியவர்கள் இந்த உழவர் சந்தையை நம்பி சாலை ஓரம் நடைபாதையில் கடைகளை போட்டு தங்களதுஞசஞ்ச வாழ்க்கையை ஜீவனம் செய்து வருகின்றனர் .இந்நிலையில் காட்பாடி உழவர் சந்தைக்கு வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த நடைபாதை வியாபாரிகளை மிரட்டி தினசரி அவர்களிடம் ரூபாய் 50 என வசூல் செய்து வருகின்றனர்.

இது போக உழவர் சந்தையின் கண்காணிப்பாளராக தற்போது பணியில் உள்ள ஜெகன் என்பவர் இந்த நடைபாதை கடைகளை நுழைவு வாயில் பகுதியில் வைத்துள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இவரும் இவருக்கு மாற்று நபர்களாக பணிக்கு வரும் இரண்டு பெண் கண்காணிப்பாளர்களும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்த நடைபாதை வியாபாரிகளிடம் தொடர்ந்து தொந்தரவு செய்து அடாவடியை காண்பித்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நீங்கள் கடை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மாதம் உழவர் சந்தை கண்காணிப்பாளர் ஜெகனுக்கு ரூபாய் 3000 தலா ஒவ்வொரு நபரும் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களது கழுத்தில் துண்டை போட்டு இறுக்க ஆரம்பித்து விட்டனர். .இதனால் அவர்கள் செய்வதறியாது திகைக்க ஆரம்பித்து விட்டனர்.

நடைபாதை வியாபாரிகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இந்த உழவர் சந்தையை நம்பி செயல்படுகின்றனர். இதையடுத்து மாலை ரரமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மீண்டும் செயல்படட் ட் இப்படி இந்த நடைபாதை கடைகளை நடத்துபவர்கள் நரிக்குறவர் இன பெண்மணிகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என மிகவும் சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ள மக்களே இந்த 15 நடைபாதை கடைகளையும் நிர்வகித்து செயல்படுத்தி பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர்களையும் விட்டு வைக்காமல் அவர்களிடமும் தங்களது அதிகாரத்தையும் துஷ்பிரயோகத்தையும் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த உழவர் சந்தை கண்காணிப்பாளர் ஜெகன் என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள். என்னை எவனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சொல்லி மார்தட்டுகிறார் இந்த மாவீரன் ஜெகன். ஏழைகள் வீட்டில் மண் அள்ளி போடுவதை இவர் என்றைக்கு நிறுத்திக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை என்று புலம்பத் தொடங்கிவிட்டனர் நடைபாதை வியாபாரிகள் .

பணபலம், படைபலம் மற்றும் ஆர்வமுள்ள அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகளிடம் மோத தைரியம் இல்லாத இந்த உழவர் சந்தை கண்காணிப்பாளர் ஜெகன் இது போன்ற வாய் செத்த பூச்சிகளாக உள்ள ஏழை ,எளியவர்களிடமும் இது போன்ற இயலாதவர்களிடமும் தனது பலத்தை காண்பிக்க ஆரம்பித்து உள்ளார் என்று சொல்லலாம். ஆதலால் இனிவரும் காலங்களில் நடைபாதை வியாபாரிகளிடம் தொந்தரவு செய்து அவரிடம் பணம் பறிக்க முற்படுவாரேயானால் ஜெகனை எதிர்த்து நடுநிலையாளர்கள் மற்றும் காட்பாடி வாழ் பொதுமக்கள் குரல் கொடுக்கவும், போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் வேளாண்மை குழு காட்பாடி உழவர் சந்தை கண்காணிப்பாளர் ஜெகன் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கை எடுத்து அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் வேளாண் விற்பனை குழு இதில் நடவடிக்கை எடுக்குமா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS