தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக குமரி மாவட்டம் நாகர்கோவில் வந்த முதல்வர் ஸ்டாலின் முதல் ஆய்உ பணியாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முதல் ராமன்புதூர் செல்லும் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சாலைகளை தரமாக போட வேண்டும் என காண்ட்ராக்டர்கள் உத்தரவிட்டார் பழை ய சாலைகளை முழுமையாக அப்புறப்படுத்தி புதிய சாலைகள் போட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை பணிகள் மற்றும் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் நடைபெற்று வரும் கட்டுமான மற்றும் பால பணிகளை பார்வையிட புறப்பட்டுச் சென்றார்,அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ்,மேயர் மகேஷ்,ஆட்சியர்.அரவிந்த்,போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.