சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!
காட்பாடியில் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக 111 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களை காக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில்.
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர். இந்நிலையில் கத்திரி வெயில் 4ம் தேதி தொடங்கி யுள்ள நிலையில் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் வெப்பம் பதிவு ஆவதில் முதலிடம் வகிக்கிறது.
கத்தரி வெயிலின் தாக்கம் 111டிகிரியைத் தாண்டி தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் அதிமுக தலைமை கழகத்தின் கட்டுப்பாட்டிற்கு இணங்க பல்வேறு இடங்களில் இலவசமாக நீர் -மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் பேருந்து நிலையத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் -மோர் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இ..ரஞ்சித் குமார் தலைமையில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எஸ்.சுபாஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.எஸ்.திருமால், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அத்துடன் அங்கு திரண்டு நின்றிருந்த பொதுமக்களுக்கு நுங்கு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, ஆரஞ்சு பழம், பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, கிர்ணி பழம், மோர், ரஸ்னா, குளிர் பானங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.