BREAKING NEWS

மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.

மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவை பார்ப்பதற்குள் உயிர் பிரிந்த சோகம்

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. பத்தாம் வகுப்பு மாணவர் அணிவர் மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறையில் இருந்த இவர் இன்று காலை சென்னை மதுரவாயில் பாலத்தின் கீழே இரு சக்கர ஸ்கூட்டர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவரை மோதியதால் தூக்கி வீசப்பட்ட ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் மற்றும் குற்றவியல் போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஒட்டி வந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ள போலீசார் அதன் நம்பரை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்..

CATEGORIES
TAGS