ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.குடும்பமாக தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நிறுவனத்திற்குள்ளாகவே குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில்.
தொழிற்சாலைக்குள் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக ஒசூர் மதுவிலக்கு மற்றும் போதைதடுப்பு பிரிவு போலிசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலிசார் தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்ததில்.மரம் போல வளர்த்து நிற்கும் கஞ்சா செடிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 12 அடி உயரத்திற்கு இருந்த 5 செடிகளை பறிமுதல் செய்து விசாரித்த நிலையில் புக்கர் யாதவ்(45) என்பவர் வடமாநிலத்தவர்களுக்கும், தானும் பயன்படுத்த வளர்த்து வந்தது தெரியவந்தது.கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் 7 கிலோ இருந்தநிலையில், புக்கர் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.