ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்

ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை இடைவிடாது செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் வசிக்கும் வெள்ளிங்கிரி தம்பதிக்கு 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு தலையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அறுவை சிகிச்சைக்காக எட்டு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதனை அறிந்த ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நல சங்கம், கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து ஒரு வாரத்தில் ரூ.1,16,000 (ஒரு லட்சத்தி பதினாறாயிரம்) திரட்டி பெண் குழந்தையின் பெற்றோர்களிடம் நேரில் சென்று வழங்கினர்.
