BREAKING NEWS

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள்  காணொலி காட்சி மூலம் திறப்பு  கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில்,

கொலை வழக்கு,அதிக மதிப்புள்ள சொத்து வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆத்தூர் பகுதி வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் சேலம் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது,பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிலையை கருத்தில் கொண்டு ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலேயே கூடுதல் மாவட்ட நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், மஞ்சுளா ஆகியோர்கள் இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தனர்.

மேலும் இந்த மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ எஸ் ராஜா அவர்கள் இன்று பதவியேற்றார்,
எட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.இதில் ஆத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவியல் ஒன்றாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, குற்றவியல் இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, விரைவு நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்களும் கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS
OLDER POST