BREAKING NEWS

காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.

காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.

காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.புகார் அளித்த 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகளை தட்டி தூக்கிய விருதம்பட்டு போலீசார் .சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 37 சவரன் நகை மீட்பு.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சௌந்தர்ராஜன் (66) இவர் முன்னாள் ராணுவ வீரர்.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி இரவு சேனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார் இதனை நோட்டமிட்ட மர்ம கும்ப கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.

கோவிலுக்கு சென்ற சௌந்தரராஜன் மீண்டும் வந்து பார்த்தபொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்துபி 09.05.2024 அன்று விருதம்பட்டு காவல் நிலையத்தில் சௌந்தரராஜன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் விருதம்பட்டு போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

சேனூர் கிராமத்தில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பதுங்கி இருப்பது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த மூன்று பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்டு விசாரணையில் சேனூர் கோட்டாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் (19) , திருமணி மெயின் ரோட்டை சேர்ந்த அவினேஷ் (19), ஹரீஷ் என்பதும் தெரிய வந்தது அவர்கள் மூன்று பேரும் சௌந்தரராஜன் வீட்டில் திருடிய 20 சவரன் நகை காட்பாடி பகுதியில் உள்ள மேலும் 4 வீடுகளில் 17 சவரன் என வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு ரூபாய் 19 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள 37 சவரன் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் சங்கர் ஹரிஷ் அவினேஷ் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து 37 சவரன் தங்க நகைகளை மீட்டு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

புகார் பெற்ற 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து நகைகளை மீட்ட காட்பாடி டிஎஸ்பி சரவணன், ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், மணிகண்டன், செந்தில், ராமமூர்த்தி மற்றும் தனிப்படை போலீசாரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டினார்.

CATEGORIES
TAGS