ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து 570 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால் மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைகோசு தோட்டம் முழுவதும் நுரை ஆக்கிரமித்ததால் விவசாயிகள் வேதனை.
கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமான அதிகரிக்க தொடங்கி உள்ளது..
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மதகுகள் சரிசெய்யப்பட்டு வருவதால், அணைக்கு வரக்கூடிய நீர் தென்பெண்ணை ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது..
நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 474கனஅடிநீர் வரத்தாக இருந்தநிலையில், இன்று நீர்வரத்து விநாடிக்கு 205 கனஅடியாக மட்டுமே இருந்தபோதும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 570 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது..
சில மாதங்களுக்கு பிறகு ஆற்றில் நீர் ஆர்பரித்து ஓடுவது விவசாயிகளுக்கு ஆறுதல் என்றாலும், ஆற்று நீரில் கலக்கப்பட்ட அதிகப்படியான ரசாயன கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஆற்றங்கரையோரமாக உள்ள எல்லை பகுதிகளில் மலைப்போல குவியல் குவியலாக நுரைப்பொங்கி காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்..
ஆற்றங்கரையோரமாக உள்ள விளைநிலங்களும் காற்றின் காரணமாக நுரை ஆக்கிரமித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து சில மீட்டர் தூரத்திலேயே விளைநிலங்களில் 50 அடி உயரம் வரை தென்னைமரத்தை முழுவதும் மூடும் வகையில் நுரைப்பொங்கி மலையாக காட்சியளிக்கிறது..
அருகே 2 ஏக்கர் பரப்பளவிலான முட்டைகோசு தோட்டமும் நூரையால் மூடப்பட்டதால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை.