BREAKING NEWS

கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை வென்ற குடும்ப தலைவிகள்.

கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை வென்ற குடும்ப தலைவிகள்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பன் ரிபப்ளிக் வணிக வளாகத்தில், இரண்டு நாட்கள் நடைபெற்ற கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை வென்ற குடும்ப தலைவிகள்..

கோவை பீளமேடு பகுதியி்ல் உள்ள பன் மால் வளாகத்தில் கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் பல்வேறு போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த விழாவை பேஷன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட் மற்றும் பன் மால் இணைந்து நடத்தியது.

இந்த நிகழ்ச்சியை பேஷன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட் நிறுவனர் சுகுணா சண்முகம் தலைமை தாங்கினார், இந்த நிகழ்வானது கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள, இல்லற வாழ்வில் ஈடு இணையற்ற பணிகளை செய்து வரும் குடும்ப தலைவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், குழந்தைகளின் பல்வேறு தனி திறன்களை மேம்படுத்தும் வகையிலும் அமைந்தது. குடும்ப பெண்களின் தனிபட்ட திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற முதல் நாளான ஜூன் 11ம் தேதி குழந்தைகளுக்கான ஓவிய போட்டிகள், குழந்தைகளிடம் உள்ள பலதிறன் அறியும் போட்டிகள், கிட்ஸ் பேஷன் வாக், நடைபெற்றது.

இதனை தொடர்த்து குடும்ப தலைவிகளுக்கு சமையல் போட்டிகள், மெஹந்தி போட்டிகள், நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய மகளீர் காவல் நிலைய காவலர் ஸ்ரீ லேகா, கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டினார் மேலும் தற்போதய சூழலில் காவல்துறை பெண்களுக்கு எவ்வாறான நன்மைகளை செய்து வருகின்றது.

எவ்வாறான குற்றங்களுக்கு எவ்வாறான தீர்வுகள் என பெண்கள் மத்தியில் சிறப்புறையாற்றினார் இரண்டாவது நாளான ஜூன் 12ம் தேதி பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆடை வடிவமைப்பு துறை கலைஞர்கள் கலந்து கொண்டு தாங்கள் வடிவமைத்த ஆடைகளை அணிவித்து கேட்வாக் நடந்து அசத்தினர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை குடும்ப தலைவிகளான கிருஷ்ணபிரபா, செளமியா, காயத்ரி ஆகியோர் பெற்றதாக நடுவர்களாக கலந்து கொண்ட, பிஎஸ்ஜி கல்லூரியின் டெக்ஸ்டைல் துறை தலைவர் திவ்யா, மற்றும் கோவையில் பிரபலமான அனிகா பொட்டிக் நிறுவனர் ஷில்பா ஆகியோர் விழா மேடையில் தெரிவித்தனர்.

அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அலங்கார வடிவமைப்பாளர் மற்றும் உடல் சிற்ப சிகிச்சை நிபுணர் ஜெயா மகேஷ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவையை சேர்ந்த என். ஐ ஈவன்ட்ஸ் அமைப்பினர் செய்து இருந்தனர். இதனை வணிக வளாகம் வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டொர் கண்டு ரசித்து, மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS