கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலை சரிவுகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு.
கொடைக்கானலில் நான்கு தினங்களாக கனமழையின் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது. இதில் கோடை விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொடைக்கானல்- வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் அங்கங்கே சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக நட்டங்கரை பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெருமளவு மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு சுமார் 4 மணிக்கு மேல் நிலவியது. இதில் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு வனத்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை உதவியுடன் மரங்கள், கற்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர்.