BREAKING NEWS

வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!

வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர்  மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!

வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா பஸ்வேஸ்வரா தெரு, புவனேஸ்வரி பேட்டையைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் அவரால் தவணை பணம் செலுத்த இயலவில்லை. அதன் பிறகு வீட்டை ஜப்தி செய்வதாக கூறியதால் இதுகுறித்து அவரது நண்பர் ஒருவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் புருஷோத்தமனை சேலம் அஸ்தம்பட்டு, எழில் நகர் 2வது தெருவில் உள்ள சுமங்கலி நிதி கன்சல்டிங் என்கிற அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் உரிமையாளர் திருநாவுக்கரசு என்கிற சுரேஷ் என்பவரிடம் புருஷோத்தமனுக்கு ஏற்பட்டுள்ள பண பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பல ஆவணங்களை தயார் செய்ய வேண்டி சிறக சிறுக ரூபாய் 14 லட்சத்து 40 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார்.

புருஷோத்தமன் பல ஆவணங்களை தயார் செய்து கொடுத்த பிறகும் கடன் தொகை ரூபாய் ஒரு கோடி கிடைக்க உள்ளதாக உறவினர்களிடம் கடன் பெற்று அவரிடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடன் கிடைக்காது என்று உறுதியாக தெரிந்து கொண்ட புருஷோத்தமன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு சுரேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது நான் திமுகவைச் சார்ந்தவன், முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு நெருங்கிய உறவினர். உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அடியாட்களை வைத்து மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் துப்பாக்கியை காண்பித்து சுட்டு விடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து கடந்த 17.0 4 .2023 ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் புருஷோத்தமன். ஆனால் பணம் கடன் லோன் தருவதாக கூறிய ரூபாய் 14 லட்சத்து 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த திமுக பிரமுகர் சுரேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து நான் இழந்த பணம் ரூபாய் 14 லட்சத்து 40 ஆயிரத்தை பெற்று தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புருஷோத்தமன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.

மணிவண்ணிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக பிரமுகரான திருநாவுக்கரசு என்கிற சுரேஷை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS