தேனி மாவட்டம் கம்பமெட்டு மலைச்சாலை அருகே உள்ள ஓடைப்பகுதியில் கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை
இந்நிலையில் இன்று காலை கம்பம் மெட்டு மலைச்சாலையின் அடிவாரப் பகுதியில் சாலையின் அருகே உள்ள ஒரு ஓடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தில் பூட்டிய நிலையில் கார் ஒன்று சந்தேகப்படும்படியாக நின்றிருந்துள்ளது.
அப்பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்ற நபர்கள் சிலர் அதனை பார்த்துவிட்டு உடனடியாக கம்பம் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்து பார்த்த கம்பம் காவல்துறையினர் காருக்குள் பெண் உட்பட 3 நபர்கள் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் ஜார்ஜ் சக்கரியா 58,அவரது மனைவி ஜார்ஜ் மெர்சி 55,அவரது மகன் அகில் ஜார்ஜ் 32.என்பது தெரிய வந்தது
மேலும் காரின் அருகே காலியான பூச்சி மருந்து பாட்டில்கள் மற்றும் விஷம் அருந்தும் போது கசப்பு தெரியாமல் இருப்பதற்காக குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவை கிடந்துள்ளது
எனவே மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இறந்தவர்கள் கோட்டயம் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக காணாமல் போனதாகவும் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பூட்டியுள்ள காரினை சோதனை செய்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட உடல்கள் மூன்றும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கம்பம் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது