BREAKING NEWS

முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

கோபிடிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வலுப்பூர் நல்ல முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வால்பூர் நல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மே மாதம் வெகு விமர்சியாக கொண்டாப்படுவது வழக்கம், இந்த திருவிவையொட்டி வெளியூர்களில் பணிபுரியும் ஏராளமானோர் இந்த திருவிழாவிற்க்கு தவறாமல் கலந்து கொள்வார்கள், இந்த கோவில் திருவிழாவின்போது அதிகளவு பக்தர்கள் கலந்து கொள்வதால் ஆண்டு தோறும் கம்பம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்,

இந்த ஆண்டு வலுப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மே 2 ஆம் தேதி பூச்சாட்டுகளுடன் துவங்கியது, அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல், பெருமாள் அலங்காரம், சொர்ண அலங்காரம், திருவிளக்கு பூஜை பட்டுப்போர்த்தி ஆ,டுதல் மதுரை வீரன் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

நேற்று இரவு அம்மைஅழைத்தல் நிகழ்ச்சியை தொடாந்து இன்று காலை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள்,
குழந்தைகள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்,

இந்த ஊர்வலமானது, வாய்க்கால் ரோடு காளியண்ணன் எக்ஸ்டென்ஷன் நால்ரோடு கருமையாவீதி,
ஜெயராம் அஞ்சு மூக்கு வீதி வழியாக கோவிலை அடைந்தது, பின்னர் மாவிளக்கு எடுத்துவந்த பெண்கள் குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS