கே.வி.குப்பம் அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டு பாதையை மீட்டு தர கோரி இறந்த பெண்மணி உடலை வைத்து ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல்மாயில் அடுத்த தர்மாவரம் இடுகாட்டு வழிப்பாதை மற்றும் இடத்தை ஒரு தனிப்பட்ட நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலையில் இன்று அந்த பகுதியில் சீனன் என்பவரின் மனைவி காசியம்மாள் (70) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
நாளை காசியம்மாளை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் தனிப்பட்ட நபர் ஆக்கிரமிப்மைப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து காசி அம்மாள் உடலை கே.வி.குப்பம் பி.டி.ஓ அலுவலகம் எதிரில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த தர்மாவரம் ஊர் மக்கள் காசியம்மாள் உடலை வேனில் ஏற்றிக்கொண்டுசென்றனர்
இந்த நிலையில் தகவல் தெரிந்து வந்த கே.வி.குப்பம் அடுத்த மேலமாயிலில் போலீசார் வேனை தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேலும் போலீசார் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர் நிர்மலா மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்
அதிகாரிகள் நாளை சுடுகாட்டு ஆக்கிரமிப்பு இடத்தை ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறியது அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் .இதனால் மேல்மாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது