மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ க்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ க்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தொடக்க நிகழ்வாக இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் உதவி ப்பேராசிரியர் முனைவர்.தே.ஷீஜா வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர்.சி.எம். பத்மா தலைமை உரை ஆற்றினார். தலைமை உரையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் பெண்கள் கலங்குதல்கூடாது. மாறாக கதிரவனை ப்போல இலங்குதல் வேண்டும் என்றுகூறினார்.இச்செய்தி மாணவிகளுக்கு உற்சாகம் தருவதாக அமைந்தது.சிறப்பு விருந்தினர் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் டி.சாந்தகுமாரி உரையில் இளந்தலைமுறை மாணவிகள் பெற்றோருக்கு கீழ்படிந்தால் வாழ்வில் நல்நிலையை பெற்று க்கொள்ளமுடியும் என்றும், ஆசிரியரை மதித்தால் உயர்வை அடையலாம் என்றும் ஒழுக்கம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்றும் அறிவுறுத்தினார். மாணவிகளை ரசிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பேச்சாக அவரது உரை அமைந்துது. நிகழ்வில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் உதவி ப்பேராசிரியர் முனைவர்.ரெனி நன்றியுரை கூறினார்.நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞர் செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.தே.ஷீஜா செய்திருந்தார்.