மயிலாடுதுறையில் தீர்த்தவாரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடும் புகழ்பெற்ற காவிரி துலா கட்ட பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சாலை இரண்டாக பிளந்தது
மயிலாடுதுறையில் தீர்த்தவாரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடும் புகழ்பெற்ற காவிரி துலா கட்ட பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சாலை இரண்டாக பிளந்தது. பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கயிறு கட்டி வைத்துள்ள நகராட்சி , சேதமடைந்த பகுதியை உடனடியாக சீரமைக்க கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மையப்பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. காசிக்கு இணையான ஆறு இடங்களில் ஒன்றான காவிரி துலா கட்ட படித்துறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா கட்ட தீர்த்த வாரியில் 16 புண்ணிய தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள ரிஷப தீர்த்தத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர் ரிஷப தீர்த்தத்தின் கிழக்கு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததுடன் அருகில் உள்ள சாலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதி ஆற்றுக்குள் விழுந்தது. இரவு நேரத்தில் நடந்த விபத்து என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
விபத்து நடைபெற்று மூன்று நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்க நகராட்சி நிர்வாகமும் பொதுப்பணி துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சேதமடைந்த பகுதியை சுற்றி பொதுமக்கள் செல்லாதவாறு மனிதர்கள் வேலை செய்கிறார்கள் என்ற அறிவிப்பு கயிறு மட்டும் கட்டி வைத்துள்ளனர்.
தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் அந்த இடத்தில் மேலும் மழை பெய்தால் கூடுதலான பகுதிகள் இடிந்து விடக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது உடனடியாக சீரமைக்கும் பணிகளை துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.