கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூர் – கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் L.தங்கவேல் மற்றும் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட கரூர் நாடாளுமன்ற தொகுதி கழக நிர்வாகிகள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.