உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த பழமை வாய்ந்த திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா பல வருடங்களுக்கு பிறகு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது,
கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சுதர்சன பூஜையுடன் விழா மிகக் கோலாகலமாக தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து காலை நேரத்தில் மகா சாந்தி ஹோமம், சாற்றுமறை உள்ளிட்ட பூஜைகளும், மாலையில் மகா சாந்தி திருமஞ்சனமும் நடைபெற்றது,தொடர்ந்து ஜூன் 2 காலை 7 மணி அளவில் யாக சாலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, இதில் திருக்கோவிலூர் ஜீயர் கலந்து கொண்டு பல்வேறு வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் நடைபெற்ற பின்னர் கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரை விமானத்தில் ஊற்றி கும்பாபிஷேக திருவிழாவை மிகச் சிறப்பான முறையில் நடத்தினால், இதன் பின்னர் புனித நீரே பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து இரவு நேரங்களில் வீதி உலா நடைபெற்றது வினா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழா குழுவினர் உபயதாரர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்,.