வேலூரில் -இஸ்ரேல் நாட்டைக் கண்டித்து பேரணாம்பட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன கடைசி எல்லையான ரஃபாவில் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணாம்பட்டு கிளை சார்பில் பேரணாம்பட்டு நான்கு கம்பம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர். அப்துல் அஜீஸ் தலைமை தங்கினார். மாநில தலைவர்,அப்துல் கரீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், முஸ்லீம் பெண்கள் திரளாக கலந்து கொண்டு இஸ்ரேலை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினர் முடிவில் கிளைத்தலைவர் முகமது யாசீன் நன்றி கூறினார்.