மாவட்ட செய்திகள்
மகளிர் தினத்தில் உடுமலை கிளை நூலகத்தில் பள்ளி மாணவிகள் கள ஆய்வு.
மகளிர் தினத்தில் உடுமலை கிளை நூலகத்தில் பள்ளி மாணவிகள் கள ஆய்வு குறும்படங்கள் மூலம் பெண்களுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு.
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மகளிர் தினத்தன்று திறன்களை வளர்ப்பதில் நூலகத்தின் பங்கு என்ற தலைப்பில் நூல்களை ஆய்வு செய்தனர்.
பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் முனைவர் விஜயலட்சுமி வழிகாட்டுதலுடன் பள்ளி மற்றும் அரசு மாணவியர் விடுதி மாணவிகள் நூலகத்தை பார்வையிட்டு நூலகத்தில் உள்ள நூல்களை பார்வையிட்டும் படித்தும் மகிழ்ந்தனர் வாசிப்பின் அவசியம் குறித்து நூலகர் கணேசன் விளக்கினார் நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் முன்னிலை வகித்தார் . உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.கே.துரைசாமி போக்சோ சட்டம் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் பாரதியாரின் விடுதலைக் கும்மி மற்றும் மகளிருக்கான சட்டங்கள் குறித்த குறும்படத்தை இயக்கி காண்பித்தார்.
இவர் பள்ளி மாணவ மாணவியர் வளர்ச்சிக்காக பல்வேறு பகுதிகளில் இலவசமாக குறும்படங்களை தனது சொந்த செலவில் காண்பித்து வருகிறார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் பெண்கள் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும் எந்த தலைப்பில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நூலகர்கள் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா ஆகியோர் வழிகாட்டினார். மகளிர் தினத்தை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் நூலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நூல்களை பார்வையிட்டனர்.