BREAKING NEWS

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி (கிழக்கு) மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. இதைதொடர்ந்து போச்சம்பள்ளி நான்கு வழி சாலைகள் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட தலைவருமான கொ. தர்மலிங்கம் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து மேல தாளத்துடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர், மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அரசியல்

CATEGORIES
TAGS