உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீலகிரி மாவட்டம் உதகையில், இந்துத்துவ அமைப்புகள் இரு மதங்களுக்கு இடையே இன மற்றும் மத கலவரம் தூண்டுதல் வன்மையாக அத்துமீறியும் கிறிஸ்தவ வழிபாடு தளங்களில் நுழைவதும் உள்ளே வந்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவதும் ஆவணங்களை கேட்டும் காவல்துறையை அழைத்து வந்து மிரட்டுவது ஐந்து பேர் பத்து பேர் என குழுக்களாக மிரட்டுவது வாடிக்கையாகவே இருந்து வருவதாகவும், காவல்துறையும் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக வழிபாட்டு தளங்களில் மற்றும் மத சுதந்திரங்களில் தலையிடுவதும், பொய் புகார்களுக்கு ஆதரவு கொடுத்து விசாரித்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு ஜாதி, மத இன வேறுபாடு இன்றி வாழும் சமூகத்தினர் மத்தியில் சட்ட ஒழுங்கு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆட்சிக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் ஜனநாயகத்திற்கும் அரசன் அமைந்திருக்கும் மத சுதந்திரத்திற்கும் ஆபத்து விளைவிப்பதாக உள்ளது எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக காந்தல் பகுதியில் ஜெப வீடுகளுக்கு ஆராதனை குழுவிற்கும் இவர்கள் அதிகமாக பிரச்சனைகளை கொடுத்து வருவதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அத்து மீறுபவர்கள், பொய் புகார் கொடுப்பவர்கள், சட்ட ஒழுங்கை சீர்குளைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தி வந்தால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களும் கிறிஸ்துவ அமைப்புகளும் இதர கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.