கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக விவகாரம். மருத்துவமனை திறக்கப்பட்டதால் உயிரிழந்த இளைஞரின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எம் ஜி ஆர் நகர் நகரைச் சேர்ந்தவர் தனபால் – விஜியா தம்பதியர். இந்த தம்பதியரின் மூன்றாவது மகன் மகேஷ் (30) என்பவர் கடந்த திங்கள்கிழமை மாலை வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது உடல் நலக்குறைவால் மாலை வீடு திரும்பும் போது மயக்கம் மேற்பட்டு அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் அவரை அருகாமையில் உள்ள ஆல்பா எனப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சையின் போது கை கால்கள் எழுப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரை ஆல்பா மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது அரசு மருத்துவர்கள் மகேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயிரிழந்த மகேசன் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் கூறிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர். இதை எடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகேசன் உடன் பிரேத பரிசோதனைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தவறான சிகிச்சை அளிப்பதாக கூறப்படும் ஆல்பா மருத்துவமனை தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மகேஷின் தாயார் விஜயா மருத்துவமனை எதிரே போலீசார் முன்னிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.