தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்டத்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜோசப் அன்னய்யா,தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ஜனார்த்தனன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் என்.எச்.ஐ.எஸ் திட்டத்தில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
