தலைப்பு செய்திகள்
ஆசியாவில் முதல் முறையாக தஞ்சையில் தேசிய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கழகத்தில் வெப்பம் இல்லாமல் பதப்படுத்த கூடிய அதி நவீன தொழில்நுட்ப கூடம்.
ஆசியாவில் முதல் முறையாக தஞ்சையில் தேசிய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கழகத்தில் வெப்பம் இல்லாமல் பதப்படுத்த கூடிய அதி நவீன தொழில்நுட்ப கூடத்திணை மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பசுபதி குமார் பரேஸ் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மத்திய உணவு பதப்படுத்துதல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சை தேசிய உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்ப கழகத்தின் சார்பில் உணவு பதப்படுத்தல் சார்பில் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் ஆசியாவிலேயே முதல்முறையாக வெப்ப படுத்தாமல் உயர் அழுத்தத்தினால் உணவு பதப்படுத்தும் ஒருங்கிணைந்த கூட்டத்தினை மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதில் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடத்தில் விருப்பமின்றி பலப்படுத்தக்கூடிய பல்வேறு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் தேவைப்படக்கூடிய விவசாயிகள் நேரடியாக தாங்கள் உற்பத்தி பொருளை கொண்டுவந்து பதப் படுத்தி கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.