BREAKING NEWS

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி, சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கைவிடுத்தும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்…

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை தலைக்குந்தா அருகே அமைந்துள்ள சூழல் சுற்றுலா மையத்திற்கு சொந்தமான பைன் பாரஸ்ட் சுற்றுலா தளத்திற்கு கேரளா, கர்நாடகா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக அப்பகுதியில் புலி ஒன்று முகாமிட்டுள்ளது.குறிப்பாக பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களின் அருகே உலா வருவதையும், ஓய்வு எடுத்துச் செல்வதை பார்த்த அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வன ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் புலி அதே பகுதியில் முகாமிட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் கவனத்துடனும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS