BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி பெரியகுளம் நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ராஜாமுகமது மன அழுத்தத்தால் ஏற்பட்ட நெஞ்சுவலி.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 22வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜாமுகமது மன அழுத்தத்தால் ஏற்பட்ட நெஞ்சுவலி மற்றும உடல்நலக்குறைவால் தேனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகளுக்கு கட்சித்தலைமை ஒதுக்கப் பட்டுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து கொண்டு துணைத் தலைவர் பதவியை வேண்டும் என்று கேட்பதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் நேரடியாக வெற்றி பெற்றிருந்தால் கூட்டணி தர்மப்படி அவருக்குத் துணை தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து இருப்பேன்.

சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ஒருவர் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து விட்டு அவர் துணைத்தலைவர் ஆவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கும் அதற்கு கட்டுப்படுகிறேன் என்று பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாமுகமது தேனி தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் தகவல்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )