புதிதாக போடப்பட்ட சாலையை நடுவில் அடைத்து ஆளுங்கட்சியினர் இரவு பகல் எந்நேரமும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுகின்றனர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ ஆதாரத்துடன் வர்த்தகர் சங்கத்தினர் குற்றச்சாட்டு :-

மயிலாடுதுறை நகரில் 30 லட்ச ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்ட சாலையை நடுவில் அடைத்து ஆளுங்கட்சியினர் இரவு பகல் எந்நேரமும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுகின்றனர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ ஆதாரத்துடன் வர்த்தகர் சங்கத்தினர் குற்றச்சாட்டு :-
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்வது மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட 12 குளங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது சம்பந்தமாக மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் சேவை சங்கங்கள் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் சேர்ந்த மயிலாடுதுறையின் முக்கிய வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் மயிலாடுதுறையில் சுற்றி தெரியும் நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியில் நகராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வர்த்தகர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையில் பார் செயல்பட வேண்டும் என்பதற்காக புதிதாக 30 லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட ரோட்டின் நடுவே தகர ஷீட்டுகள் வைத்து ஒரு சாலையையே அடைத்து வைத்து 24 மணி நேரமும் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் உடனடியாக விளக்கம் கேட்ட மாவட்ட ஆட்சியர் சாலை ஆக்கிர அமைப்பை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆளுங்கட்சி பிரமுகர்கள் சட்டவிரோத பார் அமைத்து சாராய விற்பனையில் ஈடுபடுவதாக வீடியோ ஆதாரத்துடன் வணிகர்கள் குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.