ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, தனியார் தென்னார்வலர் அமைப்புகளின் சார்பில் மினி மரத்தான் நடை பயணம் மற்றும் பசுமையை வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஜூன் மாதம் 5 ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பசுமையின் அவசியத்தை வலியுறுத்தியும் சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கும் நோக்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி ஓசூரில், அரிமா சங்கங்கள், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மனித மேம்பாட்டு சங்கம் உள்ளிட்ட தன்னார்வலர் அமைப்புகள் ஒருங்கிணைந்து மினி மரத்தான் ஓட்டப் பந்தயம் மற்றும் நடைபயணம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் முகப்பில் இருந்து துவங்கிய மரத்தான் போட்டியை மாவட்ட வன அலுவலர் திருமதி கார்த்திகேயனி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
10 வயது முதல் 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வரையில், ஐந்து கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் தொலைவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மரத்தான் போட்டியில், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
சுமார் 2650 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஓசூர் மாநகரின் பிரதான தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.
இதில் பங்கேற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் உட்பட சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட வன அலுவலர் திருமதி கார்த்திகேயனி பேசினார்