BREAKING NEWS

செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்!

செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்!

செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இவர் சாதாரண திமுக உறுப்பினராக களம் இறங்கினார். இதையடுத்து படிப்படியாக வளர்ந்து செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை வகித்தார். இவர் தற்போது தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடியின் தீவிர விசுவாசியாக வலம் வர தொடங்கினார்.

பொன்முடி கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களிலும் செஞ்சி மஸ்தான் தவறாமல் கலந்து கொள்வார். அத்துடன் செஞ்சி மஸ்தான் பொன்முடி தன்னை பார்க்கும் வகையில் எந்த இடம் என்று கூட பார்க்காமல் அப்படியே தரையில் உட்காருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் .இந்நிலையில் இவர் படிப்படியாக உயர்ந்து திமுகவில் செஞ்சி தொகுதியில் போட்டியிட சீட்டு கிடைக்கும் நிலை உருவானது.

இதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் இவர் பெற்றார். இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று செஞ்சி மஸ்தான் அமைச்சர் பதவியையும் பெற்றார். ஆனால் அமைச்சர் பதவி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வந்ததும் இவருக்கு பதவி மோகம் மற்றும் தான் என்ற தெனாவெட்டு அதிகரிக்க தோன்றியது.

இந்நிலையில் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பது போல தன்னை உருவாக்கி விட்ட மூத்த அமைச்சர் பொன்முடியின் தலையிலேயே கை வைத்து விட்டார் செஞ்சி மஸ்தான். இதற்கு அச்சாரமாக அவரை மதிப்பது கிடையாது. நான் தான் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சியில் நான் இருப்பதால் விழுப்புரம் மாவட்டத்திற்கு நான் தான் அமைச்சர் என்று ஒரு மூத்த அமைச்சர் பொன்முடியை ஓரம் கட்டும் விதமாக இவர் நடந்து கொண்டார். இது திமுகவின் தலைமைக்கு புகாராக சென்ற வண்ணம் இருந்தது.

இந்நிலையில் பொன்முடி வரும் நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதை வழக்கமாகக் கொண்டார். அத்துடன் பொன்முடி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தான் அமைச்சர் விழுப்புரத்திற்கு இவர் அமைச்சர் கிடையாது என்று சொல்லி தனது தெனாவெட்டை வெளிப்படுத்தினார் செஞ்சி மஸ்தான். இப்படி நாளுக்கு நாள் மோதல் போக்கு மறைமுகமாக அதிகமானதால் இவர்களது பணிப் போரை அதிகார போதையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் திமுக மேலிடம் அண்மையில் இவரது வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்தது.

சீனியர் அமைச்சருடன் கருத்து வேறுபாடு இதற்கு அடிப்படை காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் செஞ்சி மஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையிலேயே கட்சிப் பதவி பறிக்கப்பட்டு இருப்பதாகவும், இனியும் தொடர்ந்து புகார்கள் வந்தால் அமைச்சர் பதவியையும் பறிக்க திமுக தலைமை தயாராக இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருந்த போதிலும் ஒன்றுமே விவரம் அறியாத செஞ்சி மஸ்தான் போன்றவர்கள் நன்கு படித்து பட்டம் பெற்ற ஒரு மூத்த அமைச்சரையே முட்டி மோதி பார்க்கும் நிலை விழுப்புரம் மாவட்டத்தில் நிலவுவது மற்ற மாவட்டங்களுக்கும் மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது.

இதனால் திமுக இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க இப்படி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையே மற்ற மாவட்டங்களிலும் திமுகவினர் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று திமுக தலைமை அனைவருக்கும் சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளது என்பது நன்கு புரிகிறது.

CATEGORIES
TAGS