நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது.
இதனால், சிறு சிறு நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால், சாலையோரங்களில் மான் கூட்டங்கள், மயில்கள், காட்டு யானைகள் உள்ளிட்டவைகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை வனத்துறை வாகனத்தில் சென்றப் போது புலி ஒன்று நீண்ட நேரம் புல் தரையில் உருண்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தது பின்பு சபாரி வாகனத்தை கண்டவுடன் அங்கிருந்து சென்றது இதை சபாரி வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கண்டு ரசித்தனர்.
TAGS nilgirisnilgiris districtnilgiris district newsநீலகிரிநீலகிரி சுற்றுலா தலம்நீலகிரி மாவட்டச் செய்திகள்நீலகிரி மாவட்டம்மாவட்டச் செய்திகள்