உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு
உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு…
இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்ல விரும்பும் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் மிக உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள இயற்கை காட்சிகளையும், மலை முகடுகளையும், சமவெளி பிரதேசங்களையும் தொலைநோக்கி மூலம் பார்வையட்டும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு FAST TAG முறை அமலில் உள்ளது. தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த FAST TAG சோதனை சாவடியை மாற்று இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த மே மாதம் 16 ம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு Fastag சோதனை சாவடியை மாற்று இடத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்ததால் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டும் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று ஜூன் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல வனத்துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.