பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக சோதனை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில்
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில்
சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள்
10 மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்-பதிவாளர் ஸ்ரீதர் கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பேரம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மோகன்ராஜ் என்பவரை பள்ளிப்பட்டு சார் பதிவு அலுவலகத்திற்கு பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் 2 நாட்களாக பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ் கணக்கில் வராத பணத்தை தமது காரில் எடுத்து செல்வதாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் ஆய்வாளர் தமிழரசி மாலா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அதற்குள் மோகன்ராஜ் அலுவலகத்தில் இருந்து சென்று விட்டார். அவரை பின்தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழியில் குமாரராஜு பேட்டை கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன்ராஜ் தனது காரில் பெட்ரோல் போட சென்ற போது சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது காரில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ₹11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே அவரை பள்ளிப்பட்டு பத்திரப்பதிவு அலுவல கத்திற்கு அழைத்துச் சென்று கணக்கில் வராத பணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைதொடர்ந்து இன்று திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள பல்லவன் திருநகர் குறுக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7:30 மணியளவில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான
10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் 10 மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் கட்டை பையில் நிறைய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைப்பற்றினார்கள்.
கைப்பற்றியுள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி புத்தகங்கள் ஆய்வு செய்த பின்னர் முறைகேடாக சொத்துக்கள் அல்லது வங்கியில் பணங்கள் இருப்பு இருந்தால் அவைகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.
7 மணி நேரமாக சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது