BREAKING NEWS

தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.

தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.

 

தேனி மாவட்டம் கம்பம் ஈ.பி. ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரின் மகன் சாய்குமார். சாய்குமார் தனது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அவரின் உடலை அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தனது வீட்டில் வைத்துக்கொண்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினருடன் போராட்டம் செய்தனர்.

 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சாய்குமார் மற்றும் அவரின் தாயார் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு சாய்குமாரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி புகார் மனு அளிக்க சென்றுள்ளனர்.

 

அப்பொழுது அங்கு இருந்த காவலர்கள் சாய்குமாரின் புகார் ஏற்காமல் அவரை திருப்பி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் கடந்த மூன்று நாட்களாகவே மன உளைச்சலில் சாய்குமார் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த வருத்தத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 

காவல்துறையினர் புகார் ஏற்றுக் கொள்ளாததால் சாய்குமார் தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறி உறவினர்கள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாய்குமார் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் காவல் துறையினர் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்பு சமாதானம் அடைந்த சாய்குமார் உறவினர்கள் சாய்குமார் உடலை காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.

 

உடலைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தார் அப்பகுதி முழுவதும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சலசலப்பாக காணப்பட்டது.

CATEGORIES
TAGS