தலைப்பு செய்திகள்
தகவல் தொடர்பு பணியில் 100 சதவீத பெண்கள் !
இன்று உலகம் முழுவதும் இன்று மார்ச் 8 மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது பெண்களுக்கென சிறப்பாக பல சலுகைகளும் அரசு வழங்கி வருகிறது.
இன்று மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளுக்கு பெண்கள் தினத்தை முன்னிட்டு இலவச டிக்கெட் வழங்கப்படும் எனவும் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சென்னை மெட்ரோ ரயிலில் இன்று பெண்களுக்கு மட்டும் இலவச ரயில் பயணம் என அறிவிப்பு வெளியானது அதேபோல் இன்று சென்னை விமான நிலையத்தில் தகவல் தொடர்பு பணியில் 100% பெண்களை அனுமதித்துள்ளனர்.
இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சென்ற விமானத்தை தரையிறக்க 32 பெண்கள் ஈடுபட்டனர் இதனை பாராட்டும் விதமாக தென்மண்டல விமான நிலைய ஆணையர் அவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவப் படுத்தினார்.
CATEGORIES Uncategorized