கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னையை அடுத்து மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அ.தி.மு.க கவுன்சிலர்கள். கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வருகிறார்.
இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19 ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார்.
இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க வில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் கல்பனா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
மேயர் கல்பனா பதவியை ராஜினாமா செய்த நிலையில் இனி அந்த பதவியை கைப்பற்றும் அடுத்த தி.மு.க பெண் கவுன்சிலர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனாவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.