மாவட்ட செய்திகள்
தஞ்சை பாரத் கல்லூரியில் உலக மகளிர் தின விழா.
தஞ்சை பாரத் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – பல்வேறு நடன படைப்புகளை வெளிப்படுத்தி பெண்கள் உற்சாகம்
தஞ்சை பாரத் கல்லூரியில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். பாரத் மகளிர் மன்ற செயலாளர் மெர்சி ஆண்டறிக்கை வாசித்தார். மகளிர் மன்ற தலைவர் வித்யா வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடன படைப்புகளை மகளிர்கள் மேடையில் அரங்கேறியது அனைவர் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மகளிர்களுக்கும் பாரத் கல்லூரி செயலர் புனிதா கணேசன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார். முடிவில் துறைத்தலைவர் சங்கீதா நன்றி கூறினார்.
CATEGORIES தஞ்சாவூர்