மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் ஒவையார் அம்மன் கோவில் பகுதியில் கோழி பண்ணையில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம்
ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒவையார் அம்மன் கோவில் பகுதியில் உள்ள அபுல்ஹுசைன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்து-பண்ணையில் இருந்த 3500 கோழிகள் உயிருடன் தீயில் எரிந்து கருகின- தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அவ்வையார் அம்மன் கோவில் பகுதியில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது,அங்கு ஆயிரக்கணக்கான கோழிகளை பண்ணையின் உரிமையாளர் மாதவலாயம் ஊரை சேர்ந்த அபுல் ஹுசைன் பராமரித்து வருகிறார்,
இந்நிலையில் இன்று திடீரென காட்டுத்தீ கோழிப்பண்ணை கூடாரத்தில் பிடித்துள்ளது,இதைப் பார்த்த சிலர் தீயை அணைக்க முற்பட்ட போது தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
இந்நிலையில் தீ மளமளவென எரிந்து பண்ணையில் உள்ள கோழிகளை பாதிக்கு மேல் எரிந்து கருகியது,உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்,
ஆனாலும் பண்ணையில் இருந்த 10,000 கோழிகளில் 3500 கோழிகள் தியில் எரிந்து கருகின,இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,முதற்கட்ட விசாரணையில் அவ்வையாரம்மன் கோவில் பகுதியில் உள்ள மலையில் ஏற்பட்ட காட்டு தீ காற்றில் பறந்து கோழிபண்ணையை சுற்றிய மரங்களில் தீ பிடித்து கோழிப்பண்ணையையும் தீயிக்கு இறையாகி உள்ளதாக போலீசார் தெரியவந்துள்ளனர். தோவாளை செய்தியாளர் – இளங்கோ பகவதி.